ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவுதேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! அபிஜித் தீப்கேஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் கில்லி பட நடிகை!

எதிர்நீச்சல் தொடரில் கில்லி பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

எதிர்நீச்சல் தொடரில் கில்லி பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எப்போதும் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கும்.  அதிலும்  எதிர்நீச்சல் தொடர் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும். நடிகர் மாரிமுத்துவுக்கு பிறகு, இத்தொடரின் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டது.

Story image

ஆனால், தற்போது இத்தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மாரிமுத்துவுக்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்துவருகிறார். 

இத்தொடரில் சத்யப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தற்போது கதையில் ஜனனி அப்பாவின் அண்ணன் மகன்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், ஜனனி உடைய அப்பாவின் அம்மாவாக (அப்பத்தா) டி.கே. கலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருவி படத்தில் டி,கே. கலா

குருவி படத்தில் டி,கே. கலா

டி.கே. கலா விஜய்யின் கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்திருந்தார். குருவி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார்.

இவர் நடிகை மட்டுமில்லாம் சிறந்த பாடகரும் கூட. இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் பலப் பாடல்களை பாடியுள்ளார். 

எதிர்நீச்சல் தொடரில், டி.கே. கலாவின் வருகை கதையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.