சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

சிறிய படங்களுக்கும் வாய்ப்பு... மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த திரைப்படத் தொழிலாளர் சங்கம்!

அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கம் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருக்கு வைத்துள்ள கோரிக்கை குறித்து...

Posters for the film Pyre and 'Ramayana'

பைர், ராமாயணா படத்தின் போஸ்டர்கள் - படங்கள்: எக்ஸ் / சோனி பிக்சர்ஸ், வினோத் கப்ரி

Updated On :

இயக்குநர் வினோத் கப்ரியின் பைர் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தும் திரையரங்குகள் கிடைக்காதது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த விவாகரத்தில் அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கம் வினோத் கப்ரிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இயக்குநர் வினோத் கப்ரியின் பைர் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வயதான தம்பதிகள் பற்றிய ஃபீல்குட் படமாக உருவாகியுள்ளது.

ராமாயணா படத்தின் வெளியீட்டினால் இந்தப் படத்தின் காட்சிகள் 400லிருந்து 80ஆகக் குறைந்துள்ளது. இதனால் இயக்குநரும் பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இந்த விவகாரத்தில் அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கம் வினோத் கப்ரிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறிய படங்கள், பெரிய கனவு: அவர்களுக்கும் திரைகளை ஒதுக்குங்கள், நியாயமான வாய்ப்பை வழங்குக!

வினோத் கப்ரியா இயக்கிய பைர் படம் வெறுமனே ரூ. 2.5 கோடியால் எடுக்கப்பட்டது. 80 திரைகளில் இருந்து 400 திரைகளாக பார்வையாளர்களின் அன்பினால் அதிகரிக்கப்பட்டது. பெரிய படம் வெளியானதும் அதன் 75 சதவிகித காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கப்ரி புகார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பெரிய படத்தை எதிர்க்கவில்லை. வணிகத்துக்கு அவை நல்லது. ஆனால், சிறிய படங்கள்தான் எதிர்காலம். எல்லா பெரிய பெயர்களும் சிறியவற்றில் இருந்தே தொடங்குகின்றது.

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

✅ இந்திய திரைப்படங்களுக்கு நியாயமான திரைகள் ஒதுக்கீட்டுக் கொள்கை வேண்டும்

✅ பைர் படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டதுக்கு பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்

✅ பைர் படத்துக்கு முடிந்தளவு அதிக காட்சிகள், திரைகள் வேண்டும்

✅ தவறிழைத்தவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் எனப் பதிவிடப்பட்டது.

Summary

Film workers' body seeks probe after Pyre loses 75% screens amid Ramayana release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.