தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.
சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் கீதாஞ்சலி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். அல்லு அர்ஜுன் உள்பட பலரும் இதுதான் ராஷ்மிகாவின் சிறந்த நடிப்பென பாராட்டியிருந்தார்கள்.
இதையும் படிக்க: நடிகர் பிரபாஸின் 24வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்தியாவின் நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். அனிமல் படம் பார்த்து நடிகை ஆலியா பட் நானும் க்ரஷ்மிகா சங்கத்தில் இணைகிறேன் எனக் கூறியிருந்தார்.
Seven years of the cinematic brilliance â Congratulations! @iamRashmika for a remarkable journey in the film industry
â Ramesh Bala (@rameshlaus) December 29, 2023
Here comes a special CDP for the Celebration, once again many many congratulations #7YearsOfRashmika#NationalCrushmika pic.twitter.com/56yH7UASuE
ரிஷப் ஷெட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி எனும் படம் டிச.30 2016ஆம் ஆண்டு வெளியானது. ராஷ்மிகாவின் முதல்படம் இது என்பதால் இன்றோடு 7 ஆண்டுகள் தனது சினிமா பயணத்தை முடித்துள்ளார் ராஷ்மிகா.
இந்நிலையில் ராஷ்மிகா தனது எக்ஸ் பக்கத்தில் தனது 7 வருட சினிமா பயணம் குறித்த ரசிகர் ஒருவரின் பதிவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். பின்னர் ஒரு நீண்ட பதிவினையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ராஷ்மிகா கூறியதாவது:
இதையும் படிக்க: 2023: ஹிந்தி சினிமாவின் புத்தெழுச்சி!
இதெல்லாம் எப்படி நடந்தது? எப்போது நடந்தது? இதெல்லாம் ஏன் நடந்தது என சில நேரங்களில் நாம் நின்று யோசிக்க வேண்டும். இதுவரை நடந்த எல்லாவற்றுக்கும் நான் மிகவும் மகிழ்கிறேன். நடந்தவைகளுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன். இங்கிருப்பது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதுதான் நான் எப்போதும் கனவு காண்பது. நான் இதை உணரவேயில்லை. நான் எதை நோக்கி செல்கிறேன் என எனக்கே தெரியவில்லை; ஆனால் சரியான நபர்களுடன் பயணிக்கும்போது சற்று நின்று யோசித்தால் இதுதான் நாம் அடைய வேண்டிய இலக்கு எனப் புரிகிறது. சிறிய பெண்ணாக இருக்கும்போதிருந்து நான் கண்ட கனவு இதுதான் எனக் கூறியுள்ளார்.
அனிமல் படத்துக்குப் பிறகு ராஷ்மிகா புஷ்பா 2, ரெய்ன்போ, தி கேர்ள் பிரண்டு, சாவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Sometimes you just pause and think.
â Rashmika Mandanna (@iamRashmika) December 29, 2023
Damn!
How did it all happen.
When did it all happen.
Why did it all happen.
And I am so freaking glad - that it all, happened!
Grateful. Anchored. At peace. Happy!
This is everything that Iâve always dreamed of..
Iâd have not realised⦠pic.twitter.com/3vGvtzLkNE
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழவேற்காடு மீனவா்கள் நாளை(ஜூலை 18) கடலில் மீன் பிடிக்க தடை

பழனி கோயில் நில மோசடி: மூவர் தலைமறைவு! தேடும் பணி தீவிரம்!

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் கூட்டம்
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



