நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ படம் குறித்த புதிய அப்டேட்

விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ படம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :31 டிசம்பர் 2023, 9:55 am

DIN

விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ படம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 
‘மார்க் ஆண்டனி’  வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் ரத்னம். இந்த படத்தை ஹரி இயக்கி வருகிறார. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 
மேலும் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு தேவி பிரசாத் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 
இயக்குநர் ஹரிக்கே உரிதான ஆக்ஷன் பாணியில் படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘வாராய் ரத்னம்’ நாளை காலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.