ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

வாரிசு திரைப்படத்தின் ‘தீ தளபதி’ விடியோ வெளியானது! 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

Published On :

விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை.குறிப்பாக, 11 நாளில் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது ரூ.300 கோடியை நெருங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமனின் அதிரடியான இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. ரஞ்சிதமே லிரிக்கல் விடியோ யூடியூபில் 17 கோடி பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.  தீ தளபதி லிரிக்கல் விடியோ 5.8 கோடி பார்வைகளை கடந்துள்ளது. நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியுள்ளதும் பாடலிம் மற்றுமொரு சிறப்பம்சம். 

இந்நிலையில், தீ தளபதி பாடல் விடியோ வெளியாகியுள்ளது. வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப்.22 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.