தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகிய நடிகை! ஜீ தமிழின் சீதா ராமனில்..

'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகிய ரேஷ்மா பசுபுலேட்டி ஜீ தமிழின் புதிய தொடரில் நடித்து வருகிறார். சீதா ராமன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

News image

பிரியங்கா நல்கார் / ரேஷ்மா பசுபுலேட்டி

Updated On :6 பிப்ரவரி 2023, 1:17 pm

DIN

'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகிய ரேஷ்மா பசுபுலேட்டி ஜீ தமிழின் புதிய தொடரில் நடித்து வருகிறார். ''சீதா ராமன்'' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 'பாக்கியலட்சுமி' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த தொடரில் முதன்மை பாத்திரமான கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தத் தொடரிலிருந்து விலகினார். 

ஜீ தமிழின் புதிய தொடரில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. தற்போது ஜீ தமிழில் 'சீதா ராமன்' என்ற புதிய தொடரின் புரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. 

அந்தத் தொடரில் நாயகனின் தாயாராகவும், வில்லியாகவும் அவர் வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' தொடரின் மூலம் பலரின் மனங்களை வென்ற பிரியங்கா நல்கார் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருமணமாகி வரும் நாயகியை முதல்நாளே வீட்டை விட்டு வெளியேற்றும் மாமியாராக அவர் புரோமோவில் தோன்றுகிறார். இதனால், இந்த தொடரில் அழுத்தமான நடிப்பை ரேஷ்மாவிடம் எதிர்பார்க்கலாம் என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.