போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

‘பதான் பிடிக்கவில்லை’: குழந்தையின் கருத்துக்கு பதிலளித்த ஷாருக் கான்!

பதான் படம் பிடிக்கவில்லை எனக் கூறிய சிறுமிக்கு நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2023, 6:23 am

பதான் படம் பிடிக்கவில்லை எனக் கூறிய சிறுமிக்கு நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர்.

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இந்தப் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பதான் திரைப்படம் இதுவரை ரூ.832 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், அபிஷேக் குமார் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு காணொலியை பகிர்ந்து ஷாருக்கானை டேக் செய்திருந்தார். அந்த காணொலியில், பதான் படம் பிடிக்கவில்லை என ஒரு பெண் குழந்தை கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து ஷாருக்கான் வெளியிட்ட பதிவில், நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இளம் ரசிகர்களை ஏமாற்றி விடக் கூடாது. இது நாட்டின் இளைய சமுதாயம் குறித்த விஷயம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவேளை இந்த சிறுமி காதல் ரக படங்களை விரும்புவார் என நினைக்கிறேன். அவருக்கு தன்னுடைய தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தினை பரிந்துரைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக்கானின் இந்த கமெண்ட் டிவிட்டரில் வைரலாகி வருகின்றது.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.