'கயல்' தொடரின் காதல்! 'திருமண எபிஸோட் முடிய ஒரு வருடம் ஆகும்'!

'கயல்' தொடரின் முன்னோட்ட விடியோவுக்கு ரசிகர்கள் தெரிவித்துவரும் கருத்துகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 
'கயல்' தொடரின் காதல்! 'திருமண எபிஸோட் முடிய ஒரு வருடம் ஆகும்'!
Published on
Updated on
2 min read

'கயல்' தொடரின் முன்னோட்ட விடியோவுக்கு ரசிகர்கள் தெரிவித்துவரும் கருத்துகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'கயல்' தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக இந்த தொடர் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

இந்த தொடர் 2021 அக்டோபர் முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. யாரடி நீ மோகினி' தொடரில் நடித்த சைத்ரா ரெட்டி, ''கயல்'' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் 'ராஜா ராணி', 'காற்றின் மொழி' ஆகிய தொடர்களில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகநாக நடித்து வருகிறார். 

இருவருக்கும் இடையிலான வெளிக்காட்டிக்கொள்ளாத காதல் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. எனினும் குடும்ப சூழல் காரணமாக இருவரின் உறவும் அடிக்கடி மோதலைச் சந்திக்கும். எனினும் அவர்கள் சேர வேண்டும் என ரசிகர்கள் ஏங்க வேண்டும்  என்பது போலவே காட்சிகள் அமைக்கப்படும். 

இந்நிலையில், கயலும் எழிலும் (சஞ்சீவ்) ஒன்றாக இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி புரோமாவாக வெளிவந்துள்ளது. அதில், ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

கயலும் எழிலும் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதுதான் கயலின் எதிரியான, பெரியப்பாவுக்கு பெரும் தாக்கமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், கயலுக்கும் எழிலுக்கும் இடையிலான திருமண காட்சிகள் நடந்தால், அது ஒரு வருடத்துக்கான எபிஸோடுகளாக ஒளிபரப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

'கயல்' தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்திலிருந்தே பெரும்பாலும் டிஆர்பி பட்டியலில் மற்ற சீரியல்களைக் காட்டிலிம் முதலில் நீடித்து வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் 'கயல்' தொடருக்கு உள்ள வரவேற்பையே காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com