தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் அவதியா?

தென்னிந்திய திரையுல முன்னணி நடிகையான அனுஷ்கா அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 6:17 am

DIN

தென்னிந்திய திரையுலக முன்னணி நடிகையான அனுஷ்கா அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சமீப காலங்களாக முன்னணி நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோய்கள் குறித்து வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இவரைத் தொடர்ந்து நடிகை மம்தா மோகன் தாஸ், தன்னுடைய நிறம் மாறி வரும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், நடிகை ஸ்ருதி ஹாசன், பூனம் கவுர் போன்ற நடிகைகளும் தங்களுடைய நோய் பாதிப்புகள் குறிந்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது பிரபல நடிகை அனுஷ்கா தான் அரிய வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, எனக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளது. சிரிப்பது எல்லாம் ஒரு நோயா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சிரிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் சிரிக்க ஆரம்பித்தால் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். 

மேலும், படப்பிடிப்பில் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை சிரிப்பேன், அப்போது படப்பிடிப்பைக் கூட நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

நடிகை அனுஷ்காவின் இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.