பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

ரூ.500 கோடி வசூலைத் தாண்டிய பதான்: ரசிகர்களுக்குப் படக்குழு அளிக்கும் சலுகை! 

இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

Updated On :

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்த பதான் படத்தின் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதான் படம் கடந்த மாதம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக ரூ. 970 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 502 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய படம் - ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2. 

இந்தக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர், ஐனாக்ஸ், இந்தியா சினிபோலிஸ் மற்றும் வேறு சில திரையரங்குகளில் நாளை (வெள்ளிக்கிழமை) 'பதான் தினம்' கொண்டாடப்படுகிறது.

Story image

அதன்படி, இந்தியா முழுவதும் சலுகைக் கட்டணமாக மேற்கூறிய திரையரங்குகளில் ரூ. 110 மட்டுமே வசூலிக்கப்படும் என பதான் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. 

டிக்கெட் கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, பட வசூல் விரைவில் ரூ. 1,000 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.