குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பட நடிகை சிறப்பு விருந்தனராக பங்கேற்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சி ஜன.28 முதல் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக உள்ளனர். ரக்ஷன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா பங்கேற்றுள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், பாலா, ஷிவாங்கி, பவித்ரா போன்றவர்கள் வெள்ளித் திரையில் படங்களில் நடித்து வருகின்றனர்.
அதேபோல், குக்குகளாக சிருஷ்டி டாங்கே, ஷெரின், விசித்ரா, ராஜா ஐயப்பா, விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர் ராஜ்குமார், ஆண்ட்ரியா, சிவாங்கி உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில், இலிமினினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார். கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டி சுற்றில் ஆண்ட்ரியா வெற்றிபெற்றார்.
இதையும் படிக்க: தந்தை - மகள் பாசம்: ராஜா ராணி -2 நடிகையின் புதிய தொடர் 'பொன்னி'
இந்த நிலையில், இந்த வாரம் ஒளிப்பரப்பாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தனராக பங்கேற்றுள்ளார். அதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


