ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் டிக்கெட் விலையை இன்று ஒருநாள் மட்டும் குறைத்து அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இதையும் படிக்க: தனுஷ் குரலில் ’வா.. வாத்தி’ முழுப்பாடல்!
இதுவரை உலகம் முழுவதும் இத்திரைப்படம் ரூ.1,000 கோடியை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆயிரம் கோடி வசூலித்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்கிற சாதனையையும் ‘பதான்’ பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று(பிப்ரவரி 24) ஒருநாள் மட்டும் இந்தியாவில் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் ரூ.110-க்கு பதான் படத்தை காணலாம் என்று யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


