‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு 7 வில்லன்கள்?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன் 2’ படத்தினைப் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பிளாஷ்ஃபேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு பிகாரில் சமீபத்தில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியன் - 2 படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று முடிந்தது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் 30 நாள்கள் நடைபெற உள்ளதால் பிரசாத் ஸ்டூடியோவில் இப்படத்திற்கான பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு 7 வில்லன்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகியோர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...