கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

4 கோடிப் பார்வைகளைக் கடந்தது துணிவு டிரைலர்

துணிவு திரைப்படத்தின் டிரைலர் விரைவாக 4 கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2023, 8:02 am

துணிவு திரைப்படத்தின் டிரைலர் விரைவாக 4 கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. 

துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது. 

இந்நிலையில், யூடியூப்பில் வெளியான துணிவு படத்தின் டிரைலர் 3 நாள்களில் 40 மில்லியன் (4 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.