மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஜித்துடன் நேரடியாக மோதும் விஜய்: ஜன. 11-ல் வாரிசு வெளியீடு

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே விஜய்யின் வாரிசு திரைப்படமும் அதே தேதியில் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2023, 2:35 am

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே விஜய்யின் வாரிசு திரைப்படமும் அதே தேதியில் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் வினோத், நடிகர் அஜித் 3-வது முறையாக இணைந்துள்ள துணிவு திரைப்படமும், தெலுங்கு இயக்குநர் வம்சி, நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே, வாரிசுக்கு முன்னதாகவே துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், பொங்கலை முன்னிட்டு எந்த தேதியில் படம் வெளியாகும் என்ற அப்டேட் கொடுக்காமல் இருந்தனர் துணிவு படக்குழுவினர்.

இதையடுத்து, நடிகர் விஜய்யின் வாரிசு டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியான சில மணிநேரத்திலேயே துணிவு திரைப்படமானது ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பொதுவாகவே தமிழ் திரைப்படங்கள் வார இறுதி நாள்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை வெளியானாலும், வியாழக்கிழமைகளில் தான் அஜித் படம் வெளியாவது வழக்கம். இம்முறை வழக்கத்திலிருந்து மாறுபட்டு ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை வெளியிடப்படுகிறது துணிவு.

இந்நிலையில், மாலை 5 மணிக்கு வெளியிட்ட டிரைலரில் வெளியீட்டுத் தேதி குறிப்பிடாமல் இருந்த வாரிசு படக்குழு, துணிவு படத்தின் ரிலீஸ் தேதி வெளியான சில மணிநேரங்களில் நள்ளிரவு 12 மணிக்கு அதே ரிலீஸ் தேதியை அறிவித்து ஷாக் கொடுத்துள்ளனர் வாரிசு படக்குழுவினர்.

தொடக்கம் முதலே விஜய்தான் நம்பர் 1 என்று கூறி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. இந்நிலையில், இரு படங்களையும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2014-இல் வீரம் - ஜில்லா நேரடியாக மோதிக் கொண்ட பிறகு தற்போது தான் விஜய்-அஜித் படங்கள் நேரடியாக மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.