‘இந்தக் கதாபாத்திரம்தான் என்னை நடிகனாக...’- விக்ரம் அதிரடி ட்வீட்!  

நடிகர் விக்ரம் ட்விட்டரில் அவரை சிறந்த நடிகனாக மாற்றிய படத்தின் பெயரை தெரிவித்துள்ளார். 
‘இந்தக் கதாபாத்திரம்தான் என்னை நடிகனாக...’- விக்ரம் அதிரடி ட்வீட்!  

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்ஷன் நடித்த ‘ஐ’ திரைப்படம் ஜனவரி 14, 2015இல் வெளியானது. இதில் சுரேஷ் கோபி, சந்தானம், ராம்குமார் கணேசன் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விக்ரம் லிங்கேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

பாடிபில்டரான இவர் கஷ்டப்பட்டு மாடலாக முன்னேறுவார். இவரது நேர்மையினால் எதிரிகளால் உடல் பாதிப்புற்று பணம் புகழ் எல்லாவற்ரையும் இழந்து விடுவார். பின்னர் எப்படி பழி வாங்குகிறார், எப்படி மீண்டு வந்தார் என முன்பின்னான திரைக்கதையில் ஷங்கர் வித்தியாசமாக அவருக்கே உரிய பிரம்மாண்டத்துடன் எடுத்திருப்பார். 

ஆஸ்கர் ரவிசந்திரன் தயாரிப்பில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தது. இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து இணையத்தில் இந்தப் படம் தொடர்பான ஹேஷ்டேக் டிரெண்டானது. இதற்கு விக்ரம் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “லிங்கேசன் கதாபாத்திரத்திற்கு நன்றி ஷங்கர் சார். அந்த கதாபாத்திரம்தான் என்னை நடிகனாக வரையறுக்க உதவியது. அந்த கதாபாத்திரம் எல்லோரிடமும் அன்பையும் நேசத்தையும் கொடுத்தது” என பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com