‘நான் தெலுங்கு இயக்குநரோ தமிழ் இயக்குநரோ இல்லை...’- வாரிசு வெற்றி விழாவில் வம்சி 

வாரிசு படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் வம்சி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 
‘நான் தெலுங்கு இயக்குநரோ தமிழ் இயக்குநரோ இல்லை...’- வாரிசு வெற்றி விழாவில் வம்சி 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது.   

தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் ஜன.14 வெளியாகியுள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் வாரசுடு திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் அதன் கொண்டாட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் வாரிசு படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் வம்சி பேசியதாவது: 

வாரிசு படத்தை வெற்றிப் படமாக மாற்றியதற்கு தமிழ் மக்களுக்கு மிகவும் நன்றி. விஜய் சார் என்னை நம்பினார். அவரது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன். என்னை தெலுங்கு இயக்குநர் என்று குறுக்கி விடாதீர்கள். நான் தெலுங்கு இயக்குநரோ தமிழ் இயக்குநரோ இல்லை. நான் முதலில் மனிதன். பிறகுதான் எல்லாம். தமிழ் மக்களின் நெஞ்சில் இடம் கொடுத்ததிற்கு நன்றி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com