ஜெயிலர் திரைப்படத்தில் புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சுனில் இணைந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோரின் தோற்ற புகைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தில் வில்லனாக நடித்திருந்த சுனிலும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரஜினியா? சூர்யாவா? அடுத்து யாரை இயக்குகிறார் ஞானவேல்!
இந்தப் படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரம் முத்துவேல் பாண்டியன். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது. ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


