‘காந்தாரா 2’ உறுதி: படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

காந்தாரா 2 திரைப்படம் உருவாகுவதை உறுதி செய்துள்ளார் ஹோம்பாலே ப்லிம்ஸ் நிறுவனர். 
‘காந்தாரா 2’ உறுதி: படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.  காந்தாரா திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  சமீபத்தில் பஞ்சுருளியாக நடித்தவரை  சந்தித்தார் ரிஷப் ஷெட்டி. 

இந்நிலையில் ஹோம்பாலே ப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனர் விஜய் கிரங்கந்துர் ஒரு பேட்டியில் காந்தாரா 2 வருவது உறுதியென கூறியுள்ளார். மேலும் இது குறுத்து அவர் கூறியதாவது: 

காந்தாரா 2இல் காந்தாராவின் அடுத்த பகுதியாக இல்லாமல் முன்பகுதியாக உருவாக உள்ளது. இதில் கிராம மக்களுக்கும் அரசனுக்கும் உள்ள பிரச்னையாக உருவாக உள்ளது. அரசனை சுற்றியுள்ள நிலங்கலையும் மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் கதையாக இருக்கும். ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பான் இந்தியப் படமாக அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியட திட்டமிட்டுள்ளோம். கர்நாடகத்தின் கடற்கரையோரத்தில் ரிஷப் ஷெட்டி இது குறித்து ஆராய்ச்சி செய்து கதை எழுதி வருகிறார். 

படத்தின் பட்ஜெட் மட்டுமே அதிகரித்துள்ளது. கதை கூறும் முறை, ஒளிப்பதிவு என அதே தரத்தில் இருக்கும். படத்தில் நடிப்பவர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும். அநேகமாக மிகப்பெரிய நடிகர்கள் இதில் இருக்கலாம். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com