மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :24 ஜனவரி 2023, 5:18 am

DIN

ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோரின் தோற்ற புகைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தில் வில்லனாக நடித்திருந்த சுனிலும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்தப் படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரம் முத்துவேல் பாண்டியன். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது. ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில் ஜெயிலர் படத்தின் பணிகள் தொய்வு காரணமாக  படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. 

மேலும், பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டதாலும் ஜெயிலர் படம் திரைக்கு வருவது தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.