லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியான நிலையில், விஜய்யின் 67வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.
விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, விஜய் 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.
தளபதி 67 எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | காஷ்மீருக்கு தனிவிமானத்தில் பறந்த ‘தளபதி 67’ படக்குழு!
மேலும், லோகேஷ் கனகராஜ், நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் படப்பிடிப்பிற்கான சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் காஷ்மீருக்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே, கேஜிஎஃப் திரைப்படத்தில் வில்லனாக ஆதிரா கதாபாத்திரத்தில் அதிரவைத்த சஞ்சய் தத், விஜய் 67 படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

தொடர்ந்து வரிசையாக வரும் அப்டேட்டுகளால் விஜய் 67 படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலர் இடைநீக்கம்!
தேர்தலில் போட்டியா? பாஜக தலைவர் நிதின் நவீனை சந்தித்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!

ரியோ ராஜ் நடிக்கும் மேடி! போஸ்டர் வெளியீடு!

பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம்: பொதுப்பணித்துறை அறிக்கைக்கு காத்திருக்கும் பக்தர்கள்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

