தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தளபதி 67: விஜய்யுடன் இணையும் அர்ஜுன், கெளதம் வாசுதேவ்!

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2023, 4:16 pm

DIN

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

அந்தவகையில், தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி ஆகியோர் நடிகர்களாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து கும்பளாங்கி நைட்ஸ் போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்த மேத்யுவ் தாமஸ் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளார். 

அவர்களைத் தொடர்ந்து கெளதம் வாசுதேவ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். 

தளபதி 67: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நடிகர்கள் 

தளபதி 67: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நடிகர்கள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.