புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கமல் - 233 படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்.. இத்தனை கோடிகளா?

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 233-வது படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2023, 2:03 pm

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் பெரு வெற்றி பெற்றதால் அவரது இந்தியன் 2 மீண்டும் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்தியன் - 2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் வெளியிட்டுள்ளது.

‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன.

இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்.

Story image

இந்நிலையில், இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.125 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனையான படங்களின் பட்டியலிலும் கமல் - 233 இடம்பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.