சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

விவாகரத்தை அறிவித்த பிரபல நடிகை!

பிரபல தெலுங்கு நடிகை தனது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Published On :

பிரபல தெலுங்கு நடிகை தனது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிஹாரிகா. இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சிவின் தம்பி மகள் ஆவார். இவர் தமிழில் நடிகர் விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான ஒரு நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் அறிமுகமானர்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் கொண்டார். நிஹாரிகாவின் கணவர் சைதன்யா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே  நிஹாரிகா மற்றும் சைதன்யா இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நடிகை நிஹாரிகா பிரிவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "நானும், சைதன்யாவும் ஒருமனதாக பிரிய முடிவு எடுத்துள்ளோம்.  ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. புதிய வாழ்க்கையை ஏற்றுகொள்ள தேவையான ப்ரைவசியை கொடுங்கள். புரிந்து கொண்டதற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை நிஹாரிகாவின் விவாகரத்து குறித்த அறிவிப்பு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.