சின்னத் திரை தொடர்களின் டிஆர்பி பட்டியல்! முதலிடத்தில் மாற்றம்!

தொலைக்காட்சிகளில் சின்னத் திரை தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது
சின்னத் திரை தொடர்களின் டிஆர்பி பட்டியல்! முதலிடத்தில் மாற்றம்!

தமிழ் சின்னத் திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத் திரை தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளைஞர்களை இலக்காக வைத்தும் தொடர்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதிக பார்வையாளர்கள் கொண்ட தொடர்கள் எது என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. 

டிஆர்பி பட்டியல்

முதலிடத்தை எதிர்நீச்சல் தொடர் பிடித்துள்ளது. இதுவரை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த கயல் தொடர் முதலிடத்தை இழந்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது. எதிர்நீச்சல் தொடர் 10.83 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கயல் தொடர் 10.64 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

மூன்றாவது இடத்தை, 9.55 புள்ளிகளைப் பெற்று வானத்தைப் போல தொடர் பெற்றுள்ளது. கடந்த மாதமும் இந்தத் தொடர் 3வது இடத்தில்தான் இருந்தது.

நான்காவது இடத்தில் 9.44 புள்ளிகளுடன் இனியா தொடர் உள்ளது. கடந்த மாதம் இனியா தொடர் 2வது இடத்தில் இருந்தது.

ஐந்தாவது இடத்தில் 9.08 புள்ளிகளைப் பெற்று மிஸ்டர் மனைவி தொடர் உள்ளது. கடந்த மாதம் 4வது இடத்தில் இந்தத் தொடர் இருந்தது. 

ஆறாவது இடத்தில் சுந்தரி தொடர் உள்ளது. இந்தத் தொடர் 9.04 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஏழாவது இடத்தை 8.23 புள்ளிகளுடன் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடர் பெற்றுள்ளது. கடந்த மாதம் 6வது இடத்தில் பாக்கியலட்சுமி தொடர் இருந்தது. 

எட்டாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பெற்றுள்ளது. இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 7.02 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

ஒன்பதாவது இடத்தில் 6.43 புள்ளிகளைப் பெற்று சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. கடந்த மாதம் 10வது இடத்தில் இருந்தது. 

பத்தாவது இடத்தில் சன் தொலைக்காட்சியின் ஆனந்த ராகம் உள்ளது. இத்தொடர் 6.24 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த மாதம் 8வது இடத்தில் இந்தத் தொடர் இருந்தது. தற்போது இரு இடங்கள் முன்னேறியுள்ளது ஆனந்த ராகம் தொடர்.

இதேபோன்று 11 முதல் 20 இடங்களைப் பெற்றுள்ள தொடர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com