பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பாரதி கண்ணம்மா நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வார நாள்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில் இரவு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கிராமத்துப் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருவாகி வருகிறது. சகோதரர்கள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு வரும் மனைவிகள் ஆகியோரே பிரதான கதாபாத்திரங்கள். சுஜிதா, ஸ்டாலின், குமரன் தங்கராஜன், விஜே தீபிகா, ஷீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனம் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சுஜிதாவுக்கு தற்போதைய கதைப்படி புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுகிறது. தனத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த அருண் பிரசாத் இந்த தொடரில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் பிரசாத் பாரதி கண்ணம்மா தொடரில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அருண் பிரசாத் வருகை ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காப்புக்காட்டில் நாளை தொல்காப்பியா் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


