மெரி கிறிஸ்துமஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்து வரும் 'மெரி கிறிஸ்துமஸ்' ஹிந்தி படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.


விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. 'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | துருவ நட்சத்திரம் 2-வது பாடல் ப்ரமோ வெளியானது!
இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது.

இந்நிலையில், ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வருகின்ற டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...