மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம்! 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

News image
Updated On :18 ஜூலை 2023, 4:21 pm

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  கன்னடம், ஹிந்தி, மராத்திப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் இசையமைப்பதை நிறுத்தவில்லை.

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதும் வென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ். தற்போது மீண்டும் சூர்யாவுடன் (சூர்யா 43) இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் நாள் இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜி.வி.100 விரைவில்” என ட்வீட் செய்துள்ளார். 

இவரது இசையில் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் நவ.24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.