92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மீனா தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிப்பு!

கடந்த சில நாள்களுக்கு முன்பு தாலாட்டு தொடர் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீனா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

News image
Updated On :18 ஜூலை 2023, 10:56 am

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மீனா தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாலாட்டு தொடர் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீனா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்தத் தொடரில் இந்து செளத்ரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஆனந்த ராகம் தொடரில் நடித்தவர். 

பிரிந்துபோன இரு குடும்பங்களை இணைப்பதற்காக மீனா மேற்கொள்ளும் முயற்சிகளே மீனா தொடரின் திரைக்கதையாக அமையவுள்ளது. 

Story image

இந்தத் தொடர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தின் கதையைப் போன்று இருப்பதாக ரசிகர்கள் பலர் கிண்டலடித்து வருகின்றனர். எனினும் இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ பலரைக் கவர்ந்துள்ளதால், இந்தத் தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்து பலரிடையே எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நண்பகல் 12 மணியளவில் மீனா தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.