கங்குவா வில்லன் இவரா?

கங்குவா திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா வில்லன் இவரா?

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நட்டி கர்ணன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நட்டி
நடிகர் நட்டி

இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ ஒன்றை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com