சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் குஷி: புதிய அப்டேட்! 

நடிகை சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் அப்டேட்டினை வெளியிட்டுள்ளது படக்குழு. 

News image
Updated On :24 ஜூலை 2023, 1:01 pm

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு, பின்னர் படங்களில் நடித்து வருகிறார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் அவரது படப்பிடிப்பு முடிந்ததாக தெரிவித்திருந்தார்.  

Story image

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார்.  ஷிவ  நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் செப்.1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

படத்தின் முதல் பாடல் வெளியாகி 70 மில்லியன் (7 கோடி) பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பினை பெற்றுவரும் நிலையில் இரண்டாவது பாடல் விடியோ சமீபத்தில் வெளியானது.  

Story image

இந்நிலையில் படத்தின் 3வது பாடலாக தலைப்புப் பாடலை (டைட்டில் பாடல்) ஜூலை 28ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.