சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பிரபல நாவலை இணையத் தொடராக்கும் சசிகுமார்!

தன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தின் கதை குறித்து சசிகுமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:12 am IST

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. 

சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ வெற்றிப்படமாக அமைந்ததுடன் நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. 

அதனைத் தொடர்ந்து, அவர் மீண்டும் இயக்குநராக புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதை உறுதிசெய்யும் விதமாக  சமீபத்தில் சசிகுமார் தன் முகநூல் பக்கத்தில், “சுப்ரமணியபுரம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுவரை என்னை அரவணைத்திருக்கும் அனைவருக்கும் நன்றியும் அன்பும். இத்தனை வருட காலத்திற்குப் பிறகு இப்பொழுது ‘குருதித் துயர் படிந்த வரலாற்றை’ இயக்கப் போகிறேன்.உங்கள் வாழ்த்துகள் வேண்டி.. அன்புடன் சசிகுமார்” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகுமார், “எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ நாவலைத்தான் நான் அடுத்ததாக இயக்கப்போகிறேன். இணையத்தொடராக உருவாகும் இதன் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறேன்”  எனத் தெரிவித்துள்ளார்.

Story image

இந்நாவலை இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா ஆகியோர் இயக்க திட்டமிட்டிருந்ததும் பின் கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.