திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நான் இந்த நடிகரின் தீவிர ரசிகை: சாக்‌ஷி சிங் தோனி

தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் தோனி தனக்குப் பிடித்த நடிகர் குறித்துப் பேசியுள்ளார்.

News image
Updated On :25 செப்டம்பர் 2023, 10:18 am

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர்.

இதன் முதல் திரைப்படமாக தமிழில் அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘லெட்ஸ் கெட் மேரிட்(எல்ஜிஎம்)’ என்கிற படத்தை தயாரித்துள்ளனர். 

இப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், தயாரிப்பாளரான சாக்‌ஷி சிங் தோனி இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சாக்‌ஷி, ‘யூடியூப்பில் கோல்ட்மேன் புரொடக்‌ஷன் மூலம் தெலுங்கு படங்களை ஹிந்தியில் பார்த்துள்ளேன். வளர வளர  நான் அல்லு அர்ஜுன் நடித்த அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டேன். நான் அவரின் தீவிர ரசிகை’ எனத் தெரிவித்துள்ளார். இது, தெலுங்கு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.