
இயக்குநர் சாய் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேபி’.
காதலியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நாயகனின் கதையாக உருவான இப்படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி தெலுங்கில் வெளியானது.
வெளியாகி 12 நாள்களே ஆன நிலையில், இப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.7 கோடியில் தயாரான ‘பேபி’ வசூலில் ஆந்திர பாக்ஸ்ஆஃபிஸை கலங்கடித்து வருகிறது.
இதையும் படிக்க: சொல்ல ஒன்றுமில்லை... நடிகை ஸ்வாதி விவாகரத்து?
விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.