மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆக்‌ஷன் ஹீரோவாகும் தோனி?

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி படத்தில் நடிப்பாரா என்ற கேள்விக்கு அவரது மனைவி சாக்‌ஷி தோனி பதிலளித்துள்ளார்.

News image
Updated On :26 ஜூலை 2023, 1:04 pm


முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி படத்தில் நடிப்பாரா என்ற கேள்விக்கு அவரது மனைவி சாக்‌ஷி தோனி பதிலளித்துள்ளார்.

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். ரோர் ஆஃப் தி லயன் என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் வுமன்ஸ் டே அவுட் என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள்.

தற்போது ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இதில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சிறப்புத் தோற்றத்தில் தோனி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எல்ஜிஎம் படம் தொடர்பான செய்தியாளர்களின் சந்திப்பின்போது, தோனி படத்தில் நடிப்பாரா என்று சாக்‌ஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “கதை நன்றாக இருந்தால் தோனி கதாநாயகனாக நடிப்பார். கேமிராவை பார்த்து வெட்கப்படுபவர் இல்லை. 2006-ல் இருந்து விளம்பரத்தில் நடித்து வருவதால், எப்படி நடிக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். அப்படி நடித்தால் ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்வேன்.” என்று சாக்‌ஷி பதிலளித்தார்.

சாக்‌ஷியின் பதிலால் தோனியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.