திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

உதயநிதியின் மாமன்னன்: இந்த வார ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!

ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஜூலை 2023, 12:52 pm

ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சுனைனா நடிப்பில் வெளியான ரெஜினா திரைப்படம் நேற்று (ஜூலை 25) அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

அதேபோல், பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும், அஸ்வின்ஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும், சிங்க் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியானது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 27 ஆம் தேதி (நாளை)வெளியாகிறது. 

போர் தொழில் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.