
கைதி நடிகர் தீனாவிற்கு பட்டுக்கோட்டையில் இன்று திருமணம் நடைபெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. முதலில் அந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் அந்நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனா, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார். தொடர்ந்து, சின்னத் திரையில் கிடைத்த புகழ் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த பா பாண்டி படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். பின்னர் தும்பா, கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இந்நிலையில், தீனாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. இதன் தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கிய சீமான்!
பட்டுக்கோட்டையை சேர்ந்த கிராஃபிக் டிசைனர் பிரகதியை இவர் திருமணம் செய்துள்ளார். இவர் சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று திருமணம் நடைபெற்றது. வரும் ஜூன் 10 ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.