ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திரிஷாவுக்கு குவியும் வாய்ப்புகள்... ஆச்சரியத்தில் கோலிவுட்!

நடிகை திரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2023, 7:52 am

DIN

நடிகை திரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த உச்ச நாயகிகள் பட்டியலில் இருப்பவர் நடிகை திரிஷா. விஜய், அஜித் படங்களில் நாயகியாக நடித்தவர் இடையில் மார்க்கெட் இழந்ததால் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக ‘96’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் அதிரடியாக நுழைந்தார். அப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் 'பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடித்து மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

தற்போது, நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’, கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம், தனுஷின் 50-வது படம் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் உள்பட மொத்தம் 7 படங்களில் நடிக்க அவரிடம் தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவின் இடத்தை திரிஷா வேகமாக நெருங்கிக்கொண்டிருப்பது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.