பிரபாஸ், சயிப் அலி கான் உள்ளிட்டோரின் நடிப்பில் ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது ஆதிபுருஷ்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழு வெளியிட்ட டிரைலர்கள் காரணமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிபார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம்.
ஏற்கனவே இந்தப் படத்துக்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக தில்லியில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்த நிலையில்தான், தில்லி-என்சிஆர் பகுதியில் உள்ள திரையரங்கில் ஆதிபுருஷ் படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையான தகவல் கிடைத்திருக்கிறது. இங்குள்ள பிவிஆர் திரையரங்கில் ஒரு டிக்கெட் ரூ.2,200க்கு விற்பனையாகியிருக்கிறது.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



