நடிகர் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை!
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் - உபசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ராம் சரண் - உபசனா தம்பதி

ராம் சரண் - உபசனா தம்பதி
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் - உபசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் எண்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், ஆஸ்கர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்தது.
முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த உபசனாவுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணமானது. கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாத இவர்கள், 2020 டிசம்பர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ராம் சரண் - உபசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த ராம் சரணின் ரசிகர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே குவிந்து கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...