காதலின் மொழி மாறிவிட்டது; அதைதான் சினிமா பிரதிபலிக்கிறது: கஜோல் 

காதலின் மொழி மாறிவிட்டது; அதைதான் சினிமா பிரதிபலிக்கிறது: கஜோல் 

பிரபல பாலிவுட் நடிகை கஜோல், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்ததிற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். 
Published on

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை. தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார்.

தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இன்ஸ்டாகிராம் பதிவுகளை அழித்து அவர் செய்த புரமோஷனை பலரும் விமர்ச்சித்தனர். 

தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்துள்ளார். இதில் தமன்னா, கஜோல், மிருணாள் தாக்குர் என பலர் நடித்துள்ளனர். ஜூன் 29இல் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கஜோல் கூறியதாவது: 

காதலின் மொழி மாறிவிட்டது; அதைதான் சினிமா பிரதிபலிக்கிறது. 1990களில் காதல் என்று நினைத்தவொன்று தற்போது துன்புறுத்தலாகவும் முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. யாரவது 15 கடிதங்கள், 10 முறை வீட்டின் கதவுகளை தட்டினாலும் 30 குறுஞ்செய்திகளை அனுப்பினாலும் ஸ்டாக்கிங் என்பர். அதுதான் தற்போதைய நிலைமை. 

தற்போது சினிமாவின் வளர்ச்சி அதிகமாகிவிட்டது. உலக சினிமாக்கள் நமக்கு முன்னே எளிதாக கிடைக்கிறது. முன்னர் ஹிந்திப் படங்களை மட்டுமே பாலிவுட் மக்கள் பார்த்து வந்தார்கள். அதனால் அவர்களது ஒப்பீடு இங்கேயே இருந்தது. ஆனால் இது தற்போது வேலைக்கு ஆகாது. புதியதாக கற்க வேண்டும். மாற வேண்டும். இல்லையெனில் தற்காலத்துக்கு சம்பந்தமில்லாத மனிதராகிவிடுவோம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com