தேவர் மகன் சர்ச்சை குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம்! 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கமளித்துள்ளார். 
தேவர் மகன் சர்ச்சை குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம்! 

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர் மகன் திரைப்படம் என்னனை மனப்பிறழ்விற்கு கொண்டு சென்றது. அந்தப் படத்தின் பாதிப்பினால்தான் மாமன்னன் திரைப்படத்தினை எடுத்துள்ளேன் எனப் பேசியது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குநர் மாரி செல்வராஜிக்கு ஆதரவும் எதிர்ப்புமாக சமூக வலதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கமல் இதுகுறித்து மன்னிப்பு கேட்ட விடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மாரி செல்வராஜ், “ நான் சென்னை வந்த புதிதில் கடிதம்கூட எழுதியிருக்கிறேன். அது அப்போதய மனநிலை. தற்போது நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். படித்திருக்கிறேன். இசை வெளியீடு விழாவில் பேசியதும் உணர்ச்சியில் பேசியதுதான். என்னுடைய நியாயத்தை கமல்சார் புரிந்து கொண்டார். மாமன்னன் படத்தினை கமல் சார் பாத்துவிட்டு என்னைப் பாராட்டினார். மேடையிலும் இது மாரி செல்வராஜ் அரசியல் அல்ல நமது அரசியல் என பேசியது போதுமானதாக இருக்கிறது. எனக்கு வெற்றி பெற்றமாதிரி இருக்கிறது” எனக் கூறியுள்ளார். 

மாமன்னன் திரைப்படம் உதியநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம். வரும் ஜூன் 29ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரஹ்மான் இசையில் பாடல்கள் கவனம் பெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com