தனுஷ் - ஜூனியர் என்.டி.ஆர். - வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம்?
இயக்குநர் வெற்றிமாறனின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் வெற்றிமாறனின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
'அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.
இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிக்க: இயக்குநர் நெல்சனுக்கு அசத்தல் பரிசளித்த ஜாக்கி ஷெராஃப்
இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
இப்படத்திற்குப் பின் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர்கள் தனுஷ் - ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து வெற்றிமாறன் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்தான அறிவிப்பு இன்று மாலை நடைபெறும் விடுதலை டிரைலர் வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...