சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லியோ படத்தில் இணைந்த ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகர்! 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். 

News image
Updated On :11 மார்ச் 2023, 5:46 am

DIN

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘லியோ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரெட் கேமரா வகைகளில் அதிநவீன கேமராவான ‘வி ராப்டார் எக்ஸ் எல்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் நிலவும் கடும் பனி காரணமாக காட்சிகளை துல்லியமாக எடுக்க இந்தக் கேமராவை படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்சா தேர்ந்தெடுந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒரு மலையாள நடிகர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். 57 வயதான பாபு ஆண்டனி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட இந்தியப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக மலையாள படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.

இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவிற்கு தந்தையாகவும் பொன்னியின் செல்வன் படத்தில் ராஷ்டிரகூட அரசராக நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.