மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘லியோ’ படப்பிடிப்பில் சஞ்சய் தத்: விடியோ வெளியிட்டு இன்ப அதிர்ச்சியளித்த படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்துள்ளார். 

News image
Updated On :11 மார்ச் 2023, 10:34 am

DIN


மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக அசத்தினார். லியோ படத்திலும் இணைந்துள்ளது எதிர்பார்பை அதிகரித்துள்ளது. தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக சஞ்சய் தத் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் விடியோக்கள் சமீபத்தில் வைரலானது. 

தற்போது, சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்ட விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் விஜய்யின் தோற்றத்தை பார்த்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்தாண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.