புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘கண்ணை நம்பாதே' படத்தின் புதிய அப்டேட்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணை நம்பாதே' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :11 மார்ச் 2023, 5:05 am

DIN

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கிவந்தார். இந்தப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள  'கண்ணை நம்பாதே' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் 'கண்ணை நம்பாதே'. இதில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். 

சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தை லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ளார்.

படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்தவையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.