மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் ‘கஸ்டடி’. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர் என்பது சிறப்பான அம்சம். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. இந்தப் படம் மே மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. தமிழ், தெலுங்கில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் டீசர் எப்போது என விடியோ வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழு. இந்த டீசரில் நாக சைதன்யா கடலில் சிறையிலிருந்து வெளிவருவது போல காட்சிகள் உள்ளது. இது டீசரல்ல;ஆனால் உங்களை டீஸ் செய்யும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விடியோ முடிவில் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16ஆம் தேதி மாலை 4.51 மணிகு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


