சின்னத்திரையில் தொடர்ந்து 'கயல்' முதலிடம்: டிஆர்பி பட்டியல் வெளியீடு!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் தொடர்ந்து 'கயல்' முதலிடம்: டிஆர்பி பட்டியல் வெளியீடு!


சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் தொடர்ந்து இந்த வாரமும் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக அளவில் மக்களால் பார்க்கப்படும் தொடர் எவை என்பது குறித்து வாரமொருமுறை வெளியாகும் டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அந்தவகையில் இந்த வாரத்துக்கான டிஆர்பி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தத் தொடர் கடந்த ஓராண்டு காலமாகவே பலமுறை முதலிடத்தில் நீடித்து வருகிறது.

கயல் 

சன் தொலைக்காட்சியில் 2021 அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 'கயல்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 'முந்தானை முடிச்சு', 'மரகத வீணை', 'கேளடி கண்மணி', 'அழகு' போன்ற தொடர்களை இயக்கிய இயக்குநர் பி.செல்வம் 'கயல்' தொடரை இயக்குகிறார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்த சைத்ரா ரெட்டி, 'கயல்' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் 'ராஜா ராணி', 'காற்றின் மொழி' ஆகிய தொடர்களில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகநாக நடித்து வருகிறார். 

இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 10.49 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

வானத்தைப் போல

அதற்கு அடுத்தபடியாக சன் தொலைக்காட்சியின் வானத்தைப் போல தொடர் 2வது இடம் பிடித்துள்ளது.  சன் தொலைக்காட்சியில் 2020 டிசம்பர் முதல் வானத்தைப்போல தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் வரும் தொடர் என்பதால் கூடுதல் சிறப்புடையதாக வானத்தைப்போல உள்ளது. ராஜ் பிரபு எழுத, ஏ.ராமச்சந்திரன் இயக்கத்தில் இந்த தொடர் உருவாகி வருகிறது. அண்ணன் - தங்கை என்ற முதன்மை பாத்திரத்தில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த் நடிக்கின்றனர். இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 10.22 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

கண்ணான கண்ணே

வானத்தைப் போல தொடருக்கு கடந்த வாரம் முடிந்த  கண்ணான கண்ணே தொடர் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சன் லைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. பப்ளூ பிரித்விராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இந்தத் தொடர் முடியும் தருணத்தில் இறுதிக் கட்டத்தில் இருந்ததால், அதிக அளவிலான ரசிகர்கள் கண்ணான கண்ணே தொடரைக் கண்டுள்ளனர். இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 9.8 புள்ளிகளைப் பெற்று 3வது இடம்பிடித்துள்ளது.

இனியா

இனியா தொடர் 4வது இடம் பிடித்துள்ளது. இந்தத் தொடரில் ஆல்யா மானசா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். 2022 டிசம்பர் முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நாராயண மூர்த்தி இயக்கும் இந்தத் தொடரில் ரிஷி, மான்ஸி ஜோஷி, பிரவீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இளைஞர்களைக் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு வருவது இந்தத் தொடரின் சிறப்பம்சம். டிஆர்பி பட்டியலில் இந்தத் தொடர் 9.67 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் 

இனியா தொடருக்கு அடுத்தபடியாக 5வது இடத்தை எதிர்நீச்சல் தொடர் பெற்றுள்ளது. 'கோலங்கள்' தொடரில் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்த திருச்செல்வம் பல வருடங்களுக்குப் பிறகு 'எதிர்நீச்சல்' தொடரை இயக்குகிறார். கோலங்கள் தொடரில் ஆர்த்தி பாத்திரத்தில் நடித்த ஸ்ரீவித்யா எதிர்நீச்சல் தொடருக்கு வசனம் எழுதுகிறார். இது தற்போதைய சூழ்நிலையில் அதிகமாக பிற்போக்குத்தனங்கள் இல்லாத தொடராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை இந்தத் தொடருக்கு அதிக அளவு ஆதரவு பெருகி வருகிறது. மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இந்தத் தொடர் டிஆர்பியில் 9.66 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சுந்தரி

அடுத்தபடியாக சுந்தரி தொடர் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.  'சுந்தரி' தொடர் 2021 பிப்ரவரி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அழகர் இயக்கும் இந்தத் தொடரில் கேப்ரியல்லா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடிக்கிறார். இந்தத் தொடர் பட்டியலில் 9.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக ஆனந்த ராகம், இலக்கியா தொடர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. (இவை சன் தொலைக்காட்சி சீரியல்களில் டிஆர்பி பட்டியல் மட்டுமே)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com