ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முதல்முறையாக ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதல்முறையாக இசைநிகழ்ச்சி நடத்த உள்ளார்.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:32 am

DIN

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதல்முறையாக இசைநிகழ்ச்சி நடத்த உள்ளார்.

தமிழில் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் இசையில் உருவான பாடல்கள் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுபவை. குறிப்பாக, காதல் பாடல்கள்.

நடிப்பிலும் மினிமம் கியாரண்டி கதாநாயகன் என்பதால் ஜி.வி.பிரகாஷ் பிசியாக இருக்கிறார். 

இந்நிலையில், கோவையில் வருகிற மே 27 ஆம் தேதி தன் முதல் இசைநிகழ்ச்சியை ஜி.வி.பிரகாஷ் நடத்துகிறார். தனியார் கல்லூரி ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

சமீப காலமாக தமிழ் இசையமைப்பாளர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ஆகியோர் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவர்களைப் பின் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், வித்யா சாகர், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசைநிகழ்ச்சிகளை நடத்த தயாராகிவிட்டனர்!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.