ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: ‘லியோ’ படத்திற்காக 30 புதிய தோற்றங்களை முயற்சித்த விஜய்!
இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. இதனை சிறப்பு போஸ்டருடன் அதிகாரபூர்வமாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின் புகைப்படங்களை பகிர்ந்து, “இது வெள்ளிக்கிழமை நடந்தது. காலையில் பழைய அம்மன் கோயிலில் படப்பிடிப்பு நடந்தது. இது எதிர்பாராத நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம் அல்லது கடவுள் தனது குழந்தையிடம் தனக்கேயான சிறிய வழிகளில் பேசுவது போல நான் நினைக்கிறேன். எனது வேலையை நேசிக்கிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Happens to be a Friday ..early start and shooting in an age old Amman temple â¦can call it coincidence or sometimes I believe god has her own sweet small ways of communicating with her child#blessingsindisguise #lovemyjob pic.twitter.com/xxqHF9RgtN
â Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 17, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!

பிரதானின் அரசியல் பயணத்தில் எதிா்பாராத சறுக்கல்...

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 26) - கடகத்துக்கு சிக்கல் தீரும்!

இன்றைய ராசி பலன்கள் (26.7.2026) 12 ராசிகளுக்கும்! வாய்ப்புகள் தேடிவரும் இந்த ராசிக்கு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



